பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுப்பவர்கள் நோயாளர்களாகவே பிறப்பார்கள் – மைத்திரிபால

பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுப்பவர்கள் நோயாளர்களாகவே பிறப்பார்கள் – மைத்திரிபால

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2014 | 6:26 pm

சுகாதாரத் துறையின் எந்தவொரு பிரிவினரும் பணிப் பகிஷ்கரிப்பிற்குத் தகுதியானவர்கள் அல்லவென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தாதியர் பயிற்சிக்காக 2500 மாணவ – மாணவிகளை இணைப்பது மற்றும் தாதியர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்குவது போன்றவற்றிற்காக, சுகாதார அமைச்சர் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு கண்காட்சி மற்றும் விநியோக மத்திய நிலையத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த வைபவத்தில், சுகாதார பிரதி அமைச்சர் லலித் திஸாநாயக்க உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாவது;

[quote]மங்கள வாத்தியங்கள் முழங்க இவர்கள் என்னை அழைத்து வரும்போது, நான் ஒரு விடயத்தை சிந்தித்தேன். 2500 பேரை நியமிக்கின்றமை பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்வதற்காகவா? என்று சிந்தித்தேன்.

சுகாதாரத்துறையில் எந்த ஓர் பதவியில் இருந்தாலும் அவர்கள் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுப்பார்களாயின், அவர்கள் அடுத்த பிறவியில் நோயாளர்களாகவே பிறப்பார்கள். சுகாதாரத்துறையில் உள்ள எந்தவொரு பிரிவினரும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ளத் தகுதியானவர்கள் அல்ல.

தற்போது 2000 இற்கும் அதிகமானவர்கள் இந்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சாந்தமாக இருக்கின்றனர். நாம் முதல் நாளில் அவர்களை அவ்வாறே அவதானிக்கின்றோம். எனினும், இரண்டு,  மூன்று ஆண்டுகளின் பின்னர் வெளியில் வரும்போது இலவச சுகாதாரத்துறை கேள்வி குறியாகின்றது.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்