நகர சபையிலுள்ளவர்களே அவரைக் கொலை செய்தனர்; ஷாமில சந்துருவனின் தாய்

நகர சபையிலுள்ளவர்களே அவரைக் கொலை செய்தனர்; ஷாமில சந்துருவனின் தாய்

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2014 | 9:07 pm

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த பேலியகொட நகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் ஷாமில சந்துருவனின் சடலம் மீதான பிரேதப் பரிசோதனைகள் இன்று முற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேலியகொட நகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினரான 23 வயதுடைய ஷாமில சந்துருவன் நேற்று (12) முற்பகல் 11.15 அளவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

பழைய கண்டி வீதியின் டயர் சந்தியிலிருந்து 100 மீற்றர்  தூரம் களனி திசையில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

நகர சபை உறுப்பினர் மற்றும் அவருடன் வருகை தந்த மற்றுமொரு நபரின் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஷாமில சந்துருவனின் பூதவுடல் இன்று அவருடைய உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஷாமில சந்துருவனின் தாய் தெரிவித்ததாவது;

[quote]நகர சபைத் தலைவராக எனது மகன் வரவிருந்தார். அதனாலேயே இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகர சபைத் தலைவராவதற்கு முன்னரே அவரை கொலை செய்து விட்டனர். நகர சபையிலுள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே அவரைக் கொலை செய்தனர். எதிர்வரும் 16 ஆம் திகதி அவர் நகர சபைத் தலைவராக பொறுப்பேற்க இருந்தார். அதற்கு முன்னரே கொலை செய்து விட்டனர்.[/quote]

இந்த சம்பவத்தில் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்துள்ள பிரபாத் மதுசங்க பஹன்வல தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்