சித்தார்த் – சமந்தா ரகசிய திருமணம்?

சித்தார்த் – சமந்தா ரகசிய திருமணம்?

சித்தார்த் – சமந்தா ரகசிய திருமணம்?

எழுத்தாளர் Staff Writer

13 May, 2014 | 9:02 am

நடிகை சமந்தாவும் சித்தார்த்தும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் படங்கள் மூலம் பிரபலமான சமந்தா இப்போது தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சூர்யா, விஜய் நடிக்கும் அடுத்த படங்களின் நாயகி இவர்தான்

காதல் சித்தார்த்தும் சமந்தாவும் ‘ஜபர்தஸ்த்’ என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாகக் கூறப்பட்டது.

காளஹஸ்தி உள்ளிட்ட கோவில்களில் இருவரும் ஜோடியாக சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். இதன் மூலம் அவர்கள் காதல் விவகாரம் பகிரங்கமானது. ஆனாலும் காதலை வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியம் காத்து வந்தனர்.

இந்த நிலையில்தான் சமந்தா தற்போது சித்தார்த் வீட்டில் குடியேறியுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதுவரை சமந்தா நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு விவகாரங்களை அவரது பெற்றோர் கவனித்து வந்தனர். தற்போது அது சித்தார்த் குடும்பத்தார் கைக்கு மாறிவிட்டதாம்.

சித்தார்த்தின் தந்தைதான் இப்போது சமந்தாவின் முகாமையாளராக செயற்படுவதாக, அவரை ஒப்பந்தம் செய்யப் போனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சித்தார்த்தும் சமந்தாவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும், வெளியில் தெரிந்தால் பெரிய பட வாய்ப்புகள் குறைந்துவிடும் என்பதால் இருவரும் மறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்