கூரிய ஆயுதத்தால் தாக்கி பொலிஸ் கான்ஸ்ரபிள் படுகொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கி பொலிஸ் கான்ஸ்ரபிள் படுகொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கி பொலிஸ் கான்ஸ்ரபிள் படுகொலை

எழுத்தாளர் Staff Writer

13 May, 2014 | 7:11 am

வெலிப்பன்ன – மீகம பகுதியில் ​பொலிஸ் கான்ஸ்ரபிள் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்டுள்ளார்.

அளுத்கம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்ரபிள் ஒருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

56 வயதான அவர் தனிப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினைத் தொடர்ந்து, இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வெலிப்பன்ன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்