குள்ளமான ஆண்களின் ஆயுள் அதிகம் – ஆய்வு முடிவு

குள்ளமான ஆண்களின் ஆயுள் அதிகம் – ஆய்வு முடிவு

குள்ளமான ஆண்களின் ஆயுள் அதிகம் – ஆய்வு முடிவு

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2014 | 3:59 pm

உயரமான ஆண்களை விட குள்ளமான ஆண்கள் அதிகக் காலம் வாழ்வார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உயரமான ஆண்களை விட குள்ளமான ஆண்களின் ஆயுட் காலம் அதிகமா, என்பது குறித்து ஹவாய் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வு முடிவு  குள்ளமான ஆண்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் உள்ளது.
5 அடி 2 அங்குலத்திற்கும் குறைவாக உள்ள ஆண்கள் உயரமான ஆண்களை விட அதிகக் காலம் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் எவ்வளவு உயரமாக வளர்கிறார்களோ அவர்களின் ஆயுட் காலம் அவ்வளவு குறைவு என்று ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குள்ளமான ஆண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் குறைவு என்பது தெரிய வந்துள்ளது.
1900 முதல் 1919ம் ஆண்டு வரை பிறந்த ஜப்பான் வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்க ஆண்கள் 2 ஆயிரம் பேர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். அதில் 1 200 பேர் 90 மற்றும் 100 வயதைத் தாண்டி வாழ்ந்துள்ளனர். மேலும் அவர்களில் 250 பேர் தற்போதும் உயிருடன் உள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்