கினிகத்தேனயில் கார் விபத்து; சிறுமி பலி, அறுவர் காயம் (Video)

கினிகத்தேனயில் கார் விபத்து; சிறுமி பலி, அறுவர் காயம் (Video)

எழுத்தாளர் Staff Writer

13 May, 2014 | 1:15 pm

ஹட்டன் – கினிகத்ஹேன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.

கினிகத்ஹேன – களுகல பகுதியில் இன்று அதிகாலை 1.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காரொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் கூறினர்.

காயமடைந்தவர்கள் தெலிகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

வத்தளையில் இருந்து ஹட்டன் – கொட்டகலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலரே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

அவர்கள் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்