காசநோயாளியை அடித்துக்கொன்ற எய்ட்ஸ் நோயாளி!

காசநோயாளியை அடித்துக்கொன்ற எய்ட்ஸ் நோயாளி!

காசநோயாளியை அடித்துக்கொன்ற எய்ட்ஸ் நோயாளி!

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2014 | 3:44 pm

மும்பை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காசநோய் பாதித்த நோயாளியை, அவரது பக்கத்து படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த எய்ட்ஸ் நோயாளி இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

சில நோயாளிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், நோயாளிகளுடன் இருந்த உறவினர்களும் காயம் அடைந்துள்ளனர்.

மும்பை மருத்துவமனையில் எய்ட்ஸ் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த 42 வயது நபர், குளுக்கோஸ் ஏற்ற பயன்படுத்தப்படும் இரும்புத் தாங்கியை எடுத்து அருகில் இருந்த நோயாளிகளைத் திடீரெனத் தாக்கியுள்ளார்.

இதில் காசநோயிலிருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப இருந்தவர் உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவரவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்