இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த மூவர் கைது

இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த மூவர் கைது

இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

13 May, 2014 | 11:01 am

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜை கடத்தப்போவதாக தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மின்னலே படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹரிஸ் ஜெயராஜ். இவர் தொடர்ந்து மஜ்னு, துப்பாக்கி,  அந்நியன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது மனைவி பெயர் சுமா. இவர்கள் வளசரவாக்கம் சவுத்திரி நகரில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஹரிஸ் ஜெயராஜ் மனைவி சுமாவின் தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்திய சந்தேகநபர்கள், ஹரிஸ் ஜெயராஜை கடத்தப் போவதாகவும், 20 இலட்ச ரூபா பணம் தரவேண்டுமெனவும் கூறிவிட்டு அழைப்பினை துண்டித்துள்ளனர்.

தொலைபேசி அழைப்பு வந்த சமயம் ஹரிஸ் ஜெயராஜ் வீட்டில் இருந்ததால், இது ஏமாற்று வேலை என்று கருதிய சுமா, இந்த தகவலை பெரிதுபடுத்தவில்லை, இதையடுத்து நேற்று காலை சுமாவுக்கு அதே இலக்கத்திலிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. அதில் பணம் தயாரா? எனவும், ஹரிஸை கடத்தப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

விடயம் பெரிதாவதை உணர்ந்த சுமா, வளசரவாக்கம் பொலிஸில் முறைப்பாடு செய்தார், விசாரணைகளை அடுத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் ஒருவர் ஹரிஸ் ஜெராஜின் அப்பாவிடம் சாரதியா பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது. இவரே சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்