யூடியூப்பில் கலக்கும் கானா பாலா (video)

யூடியூப்பில் கலக்கும் கானா பாலா (video)

எழுத்தாளர் Staff Writer

10 May, 2014 | 9:28 am

“சரவணன் என்கிற சூர்யா” என்ற படத்தின் முன்னோட்டமாக கானா பாலா பாடிய பாடல் வெளிவந்துள்ளது.

படத்தின் தலைப்பிலேயே சர்ச்சை! என்று ஆரம்பித்த படம், இதுவே படத்திற்கு பெரிய பப்ளிசிட்டியை கொடுத்திருந்த நிலையில் இந்த படத்திற்காக கானா பாலா அவர்கள் பாடிய பாடல் ஒன்று யூடியூப்பில் கலக்கி வருகிறது.

“சந்தையில! பஜாருல! அங்காடியில! மார்கெட்டுல! ஷாப்பிங் பண்ண முடியுமாட காதல” என தொடங்குகிறது பாடலின் வரி, இன்றைய இளைஞர்களுக்காகவே பாடியது போல் உள்ளது, காதலின் அப்பட்டமான உண்மையை ஆணி அடித்தார் போல் அழகாக பாடியிருக்கிறார் கானா பாலா.

“போதை என்பது 30 நாளு அதற்கு பிறகு ஆவின் பாலு, ஆசை என்பதும் 30 நாளே பிறகு அதுவே உனக்கு அமலாபாலு” என குடிமக்களுக்கு மட்டும் இல்லாமல் “குடி” மக்களுக்கும் சேர்த்து கருத்து சொல்லியிருக்கிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்