பிரமுகர் பாதுகாப்பு பொலிஸாருக்கு இடமாற்றம்

பிரமுகர் பாதுகாப்பு பொலிஸாருக்கு இடமாற்றம்

எழுத்தாளர் Staff Writer

10 May, 2014 | 7:14 pm

கம்பஹா பிரதேசத்தில்  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பிரமுகர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்ரபிள்களுக்கு பொலிஸ் மாஅதிபர் இடமாற்றம் வழங்கியுள்ளார்.

குறித்த பொலிஸ் கான்ஸ்ரபிள்கள் செய்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தம்மை வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக பொலிஸ் கான்ஸ்ரபிள்கள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த முறைப்பாடு தொடர்பில் கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் உண்மை நிலையை கண்டறியும் வரை பொலிஸ் கான்ஸ்ரபிள்கள் ஏற்கனவே கடமையாற்றிய பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

இதேவேளை, இந்த குற்றச்சாட்டினை எதிர்நோக்கியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கமலா ரணதுங்கவிடம் வினவியபோது, குறித்த பொலிஸ் கான்ஸரபிள்கள் முறையாக சேவைக்கு சமூகமளிக்காதவர்கள் என கூறினார்.

தாம் கடமை நிமித்தம் அநேகமான சந்தர்ப்பங்களில் வெளியிடங்களுக்கு செல்வதால் அவர்கள் தமது வீட்டில் நிறைவேற்றுவதற்கான வேலை ஒன்றும் கிடையாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்