தென்னாபிரிக்க பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி

தென்னாபிரிக்க பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி

தென்னாபிரிக்க பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி

எழுத்தாளர் Staff Writer

10 May, 2014 | 12:43 pm

தென்னாபிரிக்க பொதுத் தேர்தலில் ஆளும் தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணிகள் நேற்று முடிவுற்றன.

இதில் ஆபிரிக்க ஆளும் தேசிய காங்கிரஸ் 62 வீத வாக்குகள் பெற்று  வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்தக்கட்சி  1994 ஆம் ஆண்டு மறைந்த நெல்சன் மண்டேலா தலைமையின் கீழ் எதிர்கொண்ட முதல் ஜனநாயக பொதுத் தேர்தலின்போது பெற்ற அதே அளவு வாக்கு வீதத்தை ஒத்ததாக உள்ளாக   தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வெற்றியின் மூலம் அந்நாட்டு ஜனாதிபதி  ஜேகப் ஸுமாவுக்கு  இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதி  பதவியைத் தொடரும் வாய்ப்பு கிட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்