இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது

இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது

இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

10 May, 2014 | 3:00 pm

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இலங்கை மீனவர்கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மீனவர்கள் இன்று அதிகாலை இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

கைதாகியுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கு தமிழக அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வியாழக் கிழமை ஆறு படகுகளுடன் 30 இலங்கை மீனவர்கள் ஆந்திரா பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நான்கு இலங்கை மீனவர்கள் இரண்டு படகுகளுடன் ஒடிசா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களை விடுவிப்பதற்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் ஆந்திர மற்றும் ஒடிசா மாநில அரசுக்கள் அவற்றினை நிராகரித்துள்ளன.

இந்த மாநிலங்களில் கைதாகியுள்ள மீனவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய நாட்டின் கடல் எல்லைகளை மீறும் இலங்கை மீனவர்களுக்கு எதிராக தடைவிதிப்பதற்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறு  ஏனைய நாடுகளின் கடல் எல்லைகளை மீறும் படகுககளின் உரிமையாளர்களுக்கு ஒன்று தசம் 5 மில்லியன் ரூபா தடை விதிக்கப்படும் எனவும் அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.

மேலும் படகின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யவும் அதிகாரம் உள்ளதாகவும்  கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்