இருவேறு வாகன விபத்துக்களில் இருவர் பலி

இருவேறு வாகன விபத்துக்களில் இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

10 May, 2014 | 9:10 am

யாழ். மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில்  இருவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ் அரியாலையிலிருந்து சாவக்கச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரியாலை நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகனவிபத்தில் 15 வயதான சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்