வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் யாழ். விஜயம் (வீடியோ)

வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் யாழ். விஜயம் (வீடியோ)

எழுத்தாளர் Bella Dalima

07 May, 2014 | 9:11 pm

வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் 11 பேர் அடங்கிய குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இந்தக் குழுவினர் நல்லூர் முருகன் ஆலயம், யாழ். கோட்டை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆகிய இடங்களைச் சென்று பார்வையிட்டனர்.

இதேவேளை, இந்தக் குழுவினர் யாழ். மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை சந்தித்து உரையாடினர்.

இதன்போது யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பிலும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் முதலீடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முதலீடுகளை மேற்கொள்ள வெளிநாட்டவர்கள் முன்வரவேண்டும் என்று யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

வேலை வாய்ப்புகள் இல்லாமையினாலேயே சமூக கலாசாரச் சீரழிவுகள் ஏற்படுவதாகவும் அரச அதிபர் சுட்டிக்காட்டினார்.

சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், இந்தியா, மாலைத்தீவு, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, துபாய் போன்ற நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்