ரயில்கள் மோதி விபத்து; சாரதி உள்ளிட்ட மூவர் பணி இடைநிறுத்தம்

ரயில்கள் மோதி விபத்து; சாரதி உள்ளிட்ட மூவர் பணி இடைநிறுத்தம்

ரயில்கள் மோதி விபத்து; சாரதி உள்ளிட்ட மூவர் பணி இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

07 May, 2014 | 2:04 pm

அளுத்கம ரயில் விபத்து தொடர்பில் எரிபொருள் ஏற்றிச் செல்லும் ரயிலின் சாரதி, உதவி சாரதி மற்றும் மற்றும் ரயில் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆகியோர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

திணைக்கள மட்டத்தில் இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் பீ.ஏ.பி.ஆரியரத்ன குறிப்பிட்டார்.

காலியிலிருந்து பயணித்த எரிபொருள் ஏற்றிய ரயில், அளுத்கம  ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயிலுடன் மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது.

பாதுகாப்பு சமிக்ஞைகளின் உதவியுடன் ஒரு ரயில் தண்டவாளத்தில் இரண்டு ரயில்களை செலுத்துவதற்கான சந்தர்ப்பம் உள்ளபோதிலும் விபத்து ஏற்பட்டபோது மூன்று ரயில்கள் குறித்த தண்டவாளத்தில் காணப்பட்டதாகவும் பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப கோளாறினால் இந்த விபத்து ஏற்படவில்லை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பீ.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

விபத்தின்போது எரிபொருளை ஏற்றிச்சென்ற ரயிலின் என்ஜினுக்கு குறிப்பிடத்தக்களவு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சமிக்ஞை கட்டமைப்பும் சேதமடைந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்