யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் அநாமதேய துண்டுப் பிரசுரங்கள்!

யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் அநாமதேய துண்டுப் பிரசுரங்கள்!

யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் அநாமதேய துண்டுப் பிரசுரங்கள்!

எழுத்தாளர் Bella Dalima

07 May, 2014 | 7:18 pm

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்றிரவு (06)  அநாமதேய துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன.

யாழ். பல்கலைக்கழக பீடாதிபதி, பேராசிரியர்கள், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகம் சார்ந்த சிலரை அச்சுறுத்தி இந்த அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையிலான பீடாதிபதிகள் குழுவினர் இன்று பாதுகாப்புத் தரப்பை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் நாம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரசரத்தினத்திடம் வினவினோம்.

தான் உட்பட ஐந்து பீடங்களையும் சேர்ந்த பீடாதிபதிகள், சிரேஸ்ட மாணவ ஆலோசகர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் பாதுகாப்புத் தரப்பை சந்தித்ததாக அவர் தெரிவித்தார்.

இந்தக் குழுவினர் யாழ். மாவட்ட இராணுவத்தளபதி உதய பெரேரா மற்றும் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரொஹான் டயஸ் ஆகியோரைச் சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைக்காலமாக யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும், வெளியிலும்  மாணவர்கள் மீது அநாமதேய நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றமை தொடர்பில்  கலந்தாலோசிப்பதற்காக மூன்று வாரங்களுக்கு முன்னரே இந்த சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக துணைவேந்தர் மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்