பொலிஸாரே கடத்தப்படும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது – மனோ கணேஷன்

பொலிஸாரே கடத்தப்படும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது – மனோ கணேஷன்

பொலிஸாரே கடத்தப்படும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது – மனோ கணேஷன்

எழுத்தாளர் Bella Dalima

07 May, 2014 | 8:11 pm

“அதிகாரத்தைப் பகிர்வோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்” அமைப்பு இன்று  (07) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷன் தெரிவித்ததாவது;

“பொலிஸாரே வெள்ளை வேனில் வந்து கடத்தப்படுகிறார்கள். கடந்த வாரம் குருநாகலில் தெருவில் இருந்த இரண்டு போக்குவரத்து பொலிஸார் வெள்ளை வேனில் கடத்தப்பட்டிருக்கின்றார்கள். நாட்டின் சட்டமூல சீர்குலைவை இது எடுத்துக்காட்டுகிறது. சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கடத்தல், கப்பம் பெறுதல் குற்றச்சாட்டுக்களுக்காக இப்போது சிறையில் இருக்கின்றார். வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. கடந்த காலங்களிலே தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் கடத்தப்பட்டார்கள், கப்பம் வாங்கப்பட்டு பயமுறுத்தப்பட்டார்கள். இது போக இன்று பொலிஸாரே கடத்தப்படும் அளவிற்கு நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்