திருமலையில் இராணுவம், பொலிஸ் முன்னெடுத்த தேடுல் நிறைவு

திருமலையில் இராணுவம், பொலிஸ் முன்னெடுத்த தேடுல் நிறைவு

திருமலையில் இராணுவம், பொலிஸ் முன்னெடுத்த தேடுல் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

07 May, 2014 | 11:54 am

திருகோணமலை, சேருவில பகுதியில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட  தேடுதல் சுற்றிவளைப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

கடற்படை உறுப்பினரை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற 03 சந்தேகநபர்களை  கைதுசெய்வதற்காகவே நேற்று அதிகாலை தொடக்கம் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இருப்பினும் சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்காமை காரணமாக தேடுதல் நடவடிக்கை கைவிடப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

சந்தேகநபர்கள் தப்பிச்சென்ற சந்தர்ப்பத்தில் பையொன்றினை அவர்கள் கைவிட்டுச் சென்றிருந்ததாகவும், அதில் துப்பாக்கி மற்றும் குண்டுகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சூரநகர், லங்காபத்தன, ஈச்சிலம்பற்று, கல்லடி, முத்துச்சேனை, கந்தளாய், வாளாடு ஆகிய பகுதிகளில் தேடுதல் சுற்றிவளைப்புகள் இடம்பெற்றன.

சம்பவம் தொடர்பில் சேருவில பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்