ஐ.நா பொதுச்சபைத் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்

ஐ.நா பொதுச்சபைத் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்

எழுத்தாளர் Bella Dalima

07 May, 2014 | 9:32 pm

15 ஆவது சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைத் தலைவர் கலாநிதி ஜோன் டபிள்யூ ஆஷ் இன்று (07) முற்பகல் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

 இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

 இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் இதன்போது, ஆஷ் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

 நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தியை நேரில் காண முடிந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஐ.நா பொதுச் சபையின் தலைவர், சர்வதேச இளைஞர் மாநாட்டை ஆரம்பித்துவைத்து ஜனாதிபதி ஆற்றிய உரையினைப் பாராட்டியுள்ளார்.

 30 வருடகால பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், இலங்கை தெளிவானதொரு முன்னேற்றத்தினை அடைந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவிற்குப் பிறகு, துரித அபிவிருத்தியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்