இங்கிலாந்தில் வேலை இழக்கும் இந்திய வைத்தியர்கள்!

இங்கிலாந்தில் வேலை இழக்கும் இந்திய வைத்தியர்கள்!

இங்கிலாந்தில் வேலை இழக்கும் இந்திய வைத்தியர்கள்!

எழுத்தாளர் Bella Dalima

07 May, 2014 | 4:20 pm

இங்கிலாந்தில் பணிபுரியும் இந்திய வைத்தியர்கள்  பலரும் வேலை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் பணிபுரியும் வெளிநாட்டு வைத்தியர்கள் பலரைக் கடந்த ஆண்டுகளில் இங்கிலாந்து மருத்துவப் பேரவை பணி நீக்கம் செய்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சராசரியாக 250 பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் இந்திய வைத்தியர்கள் வேலை இழந்துள்ளனர்.

இவற்றில் பெரும்பாலானோர் இந்தியாவில் மருத்துவம் படித்துவிட்டு இங்கிலாந்துக்கு பணிபுரிய சென்றவர்கள்.

கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வைத்தியர்கள் 117 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கும், இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற மருத்துவ பட்டதாரிகளுக்கும் திறமையில் மிகப் பெரிய இடைவெளி நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இங்கிலாந்தில் 95 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டு வைத்தியர்கள் மருத்துவ சேவை செய்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்