யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டி கொலை

யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டி கொலை

யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டி கொலை

எழுத்தாளர் Staff Writer

04 May, 2014 | 7:49 am

யாழ். அச்சுவேலி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கூறிய ஆயுதத்தால் வெட்டி  கொலை செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டினுள் இருந்த ஐவர் மீது தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் தாய் , மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்துள்ள உயிரிழந்துள்ள பெண்ணின் மகளும், கணவரும் யாழ்  போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

குடும்ப தகறாறு காரணமான தாக்குதல் இடம்பெற்றிருக்க கூடும் என சந்தேகிப்பதாகவும் அஜித் ரோஹண கூறினார்.

சம்பவம் தொடர்பில் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பொலிஸ் அவசர பிரிவிற்கு  கிடைத்த தகவலுக்கு அமைய ,இன்று அதிகாலை இந்த சம்பவம் தொடர்பில் அறியக் கிடைத்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் அச்சுவெலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்