மன்னார் கடற்பரப்பில் சிக்கிய அரிய வகை யானை மூக்கு மீன்கள் (Video & Pictures)

மன்னார் கடற்பரப்பில் சிக்கிய அரிய வகை யானை மூக்கு மீன்கள் (Video & Pictures)

எழுத்தாளர் Staff Writer

04 May, 2014 | 5:49 pm

மன்னார் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களுக்கு அரிய வகையிலான மீனினமொன்று கிடைத்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இராமேஸ்வரம் மீனவர்களுக்கே இந்த மீன்கள் கிடைத்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Elephant-Nose-Fish-1-newsfirst

இந்தியாவின் பாம்பன் பகுதி வாழ் மீனவர்களுக்கே இந்த அரிய வகையிலான மீனினம் சிக்குண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யானையின் தும்பிக்கையை ஒத்ததான இந்த மீனின் முக வடிவமைப்பு அமைந்துள்ளதாகவும், மீனினத்தின் உடலை ஒத்ததாக இந்த மீனின் உடல் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Elephant-Nose-Fish-2-newsfirst

இந்த மீன்கள் 200 மீற்றர் முதல் 2000 மீற்றர் வரை அழமான இடத்தில் இந்த மீன்கள் வாழ்வதாகவும்,60 சென்றி மீற்றர் முதல் 140 சென்றி மீற்றர் வரை இந்த மீன் வளரும் என கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த மீனினமானது தனது தும்பிக்கையை சுய பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் நுகர்தல் போன்ற செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்