கைதான ஐ.எஸ்.ஐ  உளவாளிகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – பொலிஸார்

கைதான ஐ.எஸ்.ஐ உளவாளிகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – பொலிஸார்

கைதான ஐ.எஸ்.ஐ உளவாளிகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – பொலிஸார்

எழுத்தாளர் Staff Writer

04 May, 2014 | 8:10 pm

தமிழகத்தில் பயங்கரவாத குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள்  தொடர்பான விசாரணைகளுக்கு இலங்கை பொலிஸாரின் உதவிகள் தேவைப்படும் சந்தர்பத்தில் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இருப்பினும் இதுவரையில் இந்திய புலனாய்வுப் பிரிவினரால் எவ்விதமான உத்தியோகபூர்வ அறிவித்தல்களும் தமக்கு கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளியான இலங்கைப் பிரஜை சாஹிர் ஹுசைனுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் தமிழகத்தின் இருவேறு பகுதிகளில்  கைது செய்யப்பட்டனர்.

கண்டியைச் சேர்ந்தவரான சாஹிர் ஹூசைனிடம்  நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து சென்னை மேற்கு மாம்பலத்தில் 39 வயதான இலங்கையரும், தியாகராய நகரில் 37 வயதான மொஹமட் சலீம் என்பவரும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து சந்தேகநபர்கள் புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மத்திய ரயில் நிலையத்தில் அண்மையில்  இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்களிடமும் இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, இலங்கையிலிருந்து தமிழக கடற்கரையின் ஊடாக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறையினர் இந்தியாவுக்குள் ஊடுருவலாம் என இந்திய மத்திய புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்