காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பில் அல் கயீதா அமைப்பைச் சேர்ந்த 11 பேர் கைது

காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பில் அல் கயீதா அமைப்பைச் சேர்ந்த 11 பேர் கைது

காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பில் அல் கயீதா அமைப்பைச் சேர்ந்த 11 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

04 May, 2014 | 11:31 am

காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அல் கயீதா அமைப்பைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் அனைவருக்கும் 22 முதல் 55 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களில் விதவையொருவரும் அடங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தின் தென் பகுதியில்  இந்த விமானம் விழுந்திருக்காலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும்  அதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

தற்போது காணாமல் போன மலேசிய விமானத்தை இந்த 11 தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என  சந்தேகம் எழுந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்