காணாமற்போன மாணவி சடலமாக மீட்பு

காணாமற்போன மாணவி சடலமாக மீட்பு

காணாமற்போன மாணவி சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

04 May, 2014 | 7:31 pm

மாத்தறை பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் காணாமற்போன மாணவி ஒருவர் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவருகின்ற வீடொன்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த முதலாம் திகதி தொடக்கம் 16 வயதான குறித்த மாணவி காணாமற்போயுள்ளதாக பொலிஸாருக்கு  முறைப்பாடு கிடைத்திருந்தது

மாத்தறை கெக்கனதுர பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வீடொன்றுக்குள் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் வழங்கிய தகவலை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள பிரேத பரிசோதனையை அடுத்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்