கர்நாடகாவில் ரஜினியின் உருவ பொம்மை எரிப்பு

கர்நாடகாவில் ரஜினியின் உருவ பொம்மை எரிப்பு

கர்நாடகாவில் ரஜினியின் உருவ பொம்மை எரிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 May, 2014 | 3:51 pm

சுப்பர்‌ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான ‘லிங்கா’வின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் மைசுரில் பூஜையுடன் தொடங்கியது. அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் திட்டமிட்டு இருந்தார்.

linga

ஆனால், மைசுர் மஹாராஜா அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இப்போது, லிங்கா படத்தின் படப்பிடிப்பை கர்நாடக மாநிலத்தில் நடத்த கூடாது என பல்வேறு கர்நாடக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு காரணம், காவிரி பிரச்னையில் ரஜினி தமிழ்நாட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருப்பதுதான். காவிரி பிரச்சனைக்காக தமிழ் திரையுலகம் நடத்திய போராட்டத்தில் அவர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இப்பிரச்சனை விரைவில் அடங்கிவிடும் என நினைத்த ரஜினிக்கு மேலும் தலைவலி அதிகரித்துள்ளது, காரணம், கன்னட அமைப்புகள் தங்கள் போராட்டத்தை விரிவு படுத்தியுள்ளனர்.

இதேவேளை, நேற்று நடைபெற்ற ஆர்ப்பட்டத்தின் போது ரஜினியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.

இதனால், படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்