உணவு விஷமானதால் 95 பேர் வைத்தியசாலையில் அனுமதி

உணவு விஷமானதால் 95 பேர் வைத்தியசாலையில் அனுமதி

உணவு விஷமானதால் 95 பேர் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

04 May, 2014 | 8:24 am

அம்பாறை  மத்திய முகாம் பகுதியில் உணவு விஷமடைந்ததன் காரணமாக திடீர் சுகயீனமுற்ற 95 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென சுகயீனமுற்ற நிலையில் நேற்றிரவு இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுகயீனமுற்றவர்களில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில்  மாத்திரம் 63 பேர் சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய பொறுப்பதிகாரி டொக்டர் ஐ.எல்.ஜலால்டீன் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, மத்திய முகாம் வைத்தியசாலை மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளில்  இவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சுகயீனமுற்றவர்களில் 65 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய முகாம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்