ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் கைவிடப்பட்டுள்ளன

ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் கைவிடப்பட்டுள்ளன

ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் கைவிடப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

04 May, 2014 | 9:31 am

ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் கைவிடப்பட்டுள்ளன.

நேற்று முன் தினம் முதல் முன்னெடுக்கப்பட்ட மீட்பு பணிகளை தொடர முடியாதுள்ளதாக மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

100 மீற்றருக்கும்  கீழாக  வீடுகள் புதைந்துள்ளதனால் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலையுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை  ஆப்கானின் பதாக்ஷான் மாகாணத்தில் பெய்த கடும்   மழையினால் மலைப்பாங்கான பகுதியொன்று கிராமம் ஒன்றின் மீது சரிந்துள்ளது.

இந்த  நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரண்டாவது நாளாகவும் நேற்று முன்னெடுக்கப்பட்டதுடன் இதுவரை  350 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் நிலச்சரிவில் இரண்டாயிரத்து 500 க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பபடுகின்றது.

மேலும் மண்சரிவுகள் ஏற்படும்   அச்சம் நிலவுவதால் கிராம மக்கள் பலர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, நீர் , மருத்துவ வசதி மற்றும் தங்குமிடங்களை  ஒழுங்குப்படுத்தும்  பணிகளில்  ஐ.நா.  குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்