அயர்லாந்துடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து திஸர பெரேரா நீக்கம்

அயர்லாந்துடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து திஸர பெரேரா நீக்கம்

அயர்லாந்துடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து திஸர பெரேரா நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

04 May, 2014 | 12:22 pm

அயர்லாந்துடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை குழாத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஷமிந்த எரங்க இணைத்துக்  கொள்ளப்பட்டுள்ளார்.

சகலதுறை ஆட்டக்காரரான திஸர பெரேராவுக்கு  பதிலாகவே  ஷமிந்த எரங்கவை இலங்கை குழாத்தில் இணைத்துக் கொள்ள தீர்மானித்ததாக  இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஷமிந்த எரங்க இன்று இரவு அயர்லாந்துக்கு பயணமாகவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இங்கிலாந்து அணியுடனான போட்டிகளில்   திஸர பெரேரா பங்கேற்பார் எனவும் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

ஷமிந்த எரங்க கடந்த ஜூலை மாதத்தின் பின்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்