அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்

எழுத்தாளர் Staff Writer

04 May, 2014 | 7:17 pm

அக்கரைப்பற்று ஆதார வைத்தியாசலையில் சிகிச்சை பெற்றுவந்த கைதி ஒருவர் தப்பி சென்றுள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ், வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்றுவந்த குறித்த கைதி நேற்று நள்ளிரவு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறைச்சாலையில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தை அடுத்து கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தப்பிச் சென்றுள்ள கைதி அக்கரைப்பற்று ஆறாம் குறிச்சி பகுதியை சேர்ந்நதவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைதியை தேடும் பணியில் அக்கரைபற்று பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்