விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதியுதவி வழங்கும் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்குவதாக அமெரிக்கா தெரிவிப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதியுதவி வழங்கும் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்குவதாக அமெரிக்கா தெரிவிப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதியுதவி வழங்கும் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்குவதாக அமெரிக்கா தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 May, 2014 | 3:27 pm

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2013 ஆம் ஆண்டுக்கான பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையில் அமெரிக்கா இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகள் அமைப்பை 2009 ஆம் ஆண்டில் இராணுவ ரீதியாக தோற்கடித்தாலும் அந்த அமைப்புக்கான சர்வதேச வலையமைப்பும் நிதி சேகரிப்பு நடவடிக்கையும் தொடர்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயுத கொள்வனவு, தொடர்பாடல் விவகாரம், நிதி சேகரிப்பு உள்ளிட்ட ஏனைய செயற்பாடுகளுக்காக தமிமீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமது சர்வதேச தொடர்புகளை, வடக்கு அமெரிக்கா ஐரோப்பா மற்றும் ஆசியப் பிராந்தியங்களில் வசிக்கும் புலம் பெயர் தமிழ் சமூகத்தை பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் அல்லது அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கையில் இடம்பெற்ற யுதத்தின்போது இரண்டு தரப்பினரும் இழைத்துள்ளதாக கூறப்படும் போரக் குற்றங்கள் தொடர்பில் இதுவரை தெளிவான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அமெரிக்கா அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் கடந்த வருடத்தில் மட்டுப்படுத்தப்பட்டதாக அமெரிக்க அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மக்களை சோதனைக்குட்ப்படுத்தி கைது செய்து தடுத்து வைப்பதற்கும் இராணுவத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட பயங்கரவாத தடை சட்டம் கடந்த வருடத்தில் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்த சட்டம் இலங்கை அரசாங்கத்தை விமர்சித்துவரும் அரசியல் மாற்று கருத்துடையோரை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்