மாயமான மலேசிய விமானம்; பயணிகளின் உறவினர்களை வீடு திரும்ப அறிவுறுத்தல்

மாயமான மலேசிய விமானம்; பயணிகளின் உறவினர்களை வீடு திரும்ப அறிவுறுத்தல்

மாயமான மலேசிய விமானம்; பயணிகளின் உறவினர்களை வீடு திரும்ப அறிவுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

02 May, 2014 | 11:34 am

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சீனா நோக்கி பயணித்த எம்.எச்- 370 பயணிகள் விமானம், கடந்த மார்ச் மாதம், 8ஆம் திகதி மாயமானது. 239 பேருடன் சென்ற குறித்த விமானம், இந்திய பெருங்கடலில், அவுஸ்திரேலியா அருகே, விழுந்திருக்கலாம் என்ற நம்பிக்கையில் தேடும் பணி நடைபெற்றுவருகின்றது.

a979b84889022245ecda17f62b1bd4da

விமானத்தில் பயணத்தவர்களுடைய, உறவினர்கள், கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். உறவினர்களை பற்றிய தகவல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் அங்கு தங்கியுள்ளனர்.

airplane

இதற்குரிய செலவை, மலேசியன் எயார்லைன்ஸ் நிர்வாகம் ஏற்றுள்ளது. மாயமான விமானம் குறித்து, இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.எனவே, உறவினர்கள் வீணாக இங்கு காத்திருக்காமல், வீடுகளுக்கு திரும்பி செல்லும்படி, மலேசியன் எயார்லைன்ஸ் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

‘உடனடியாக வீடுகளுக்கு திரும்பி செல்லும் உறவினர்களுக்கு, விபத்தில் மறைந்த பயணிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படும்’ என, மலேசியன் எயார்லைன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, விமானம் மாயமானது குறித்த முதல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்