மாணிக்ககல் கொள்ளை சம்பவம்; சந்தேகநபர்கள் ஐவர் கைது

மாணிக்ககல் கொள்ளை சம்பவம்; சந்தேகநபர்கள் ஐவர் கைது

மாணிக்ககல் கொள்ளை சம்பவம்; சந்தேகநபர்கள் ஐவர் கைது

எழுத்தாளர் Staff Writer

02 May, 2014 | 7:33 pm

மாவனெல்லை, பஹல கடுகண்ணாவ பகுதியில் 26 கோடி ரூபா பெறுமதியான 09 மாணிக்ககற்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் 04 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அரேபியர் போன்று வேடமணிந்து மாணிக்கக்கற்களை கொள்வனவு செய்யும் போர்வையில், அவற்றைக் கொள்ளையிட்டு தப்பிச்சென்ற பிரதான சந்தேகநபர் மற்றும் கொள்ளையர்கள் பயணித்த வாகனத்தின் சாரதி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் எம்பிலிப்பிட்டி மற்றும் துன்கமவைச் சேர்ந்தவர்கள் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் சம்பவத்தில் தரகராக செயற்பட்ட பொலிஸ் சார்ஜன் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளை அடுத்து, சந்தேகநபர்கள் எம்பிலிப்பிட்டி மற்றும் கொடகவெல பகுதிகளில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட 26 கோடியே, 40 இலட்சத்து 43 ஆயிரம் ரூபா பெறுமதியான 09 மாணிக்கக் கற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர்கள் நாளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்