மன்னார் மறிச்சுக்கட்டியில் குடியேறியுள்ள மக்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

மன்னார் மறிச்சுக்கட்டியில் குடியேறியுள்ள மக்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

மன்னார் மறிச்சுக்கட்டியில் குடியேறியுள்ள மக்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

02 May, 2014 | 6:56 pm

மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவருகின்ற காணி அபகரிப்பு மற்றும் மணல் அகழ்வு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று நேரடியாக சென்று நிலைவரத்தை ஆராய்ந்துள்ளது.

கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை அமைச்சர்களான பி.டெனீஸ்வரன், ரி.குருகுலராசா, வடமாகாண சபை உறுப்பினர் ஏ.அஸ்மின், மன்னார் பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டவர்கள் இந்த குழுவில் அடங்குவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த குழுவிவினர் மன்னார் தீவுப் பகுதியில் ஓலைத்தொடுவாயிலுள்ள உவரி, பேசாலை மற்றும் மன்னார் பெருநிலப் பரப்பிலுள்ள கூராய், மறிச்சுக்கட்டி, முள்ளிக்குளம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று நில அபகரிப்பு மற்றும் மணல் அகழ்வு தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

மன்னார் மறிச்சுக்கட்டியில் குடியேறியுள்ள மக்களை சந்தித்த தமது குழுவினர் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்ததாக வடமாகாண சபையின் மீன்பிடி, வர்த்தகம், கைத்தொழில் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பி.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

மக்கள் குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்படாதுள்ள முள்ளிக்குளம் பகுதிக்கும் சென்று நிலைமையை கண்காணித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதிகாரிகள் நேரடியாக சென்று ஆராயாமல் மன்னார் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மணல் அகழ்விற்கான அனுமதியை வழங்கியுள்ளதை அவதானித்ததாக வடமாகாண சபையின் அமைச்சர் பி.டெனீஸ்வரன் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்