புத்தளத்தில் வாகன விபத்து; ஒருவர் பலி, ஐவர் காயம்

புத்தளத்தில் வாகன விபத்து; ஒருவர் பலி, ஐவர் காயம்

புத்தளத்தில் வாகன விபத்து; ஒருவர் பலி, ஐவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

02 May, 2014 | 12:38 pm

புத்தளம் சிலாபம் பிரதான வீதியின் முந்தல் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

புத்தளத்திலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த கெப் வாகனத்துடன் எதிர்திசையில் வந்த ஜீப் ஒன்று இன்று அதிகாலை 2.35 அளவில் மோதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

விபத்தில் மாரவில மூதுக்கட்டு பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த ஐவரும் முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் இரண்டு வாகனங்களினதும் சாரதிகளை கைது செய்துள்ள முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்