பலாங்கொடையில் மின்சூள்(torchlight) வெடிப்பு சம்பவம்; மூவர் காயம் (Video)

பலாங்கொடையில் மின்சூள்(torchlight) வெடிப்பு சம்பவம்; மூவர் காயம் (Video)

எழுத்தாளர் Staff Writer

02 May, 2014 | 3:16 pm

பலாங்கொடையிலுள்ள வீடொன்றில் இன்று காலை மின்சூள்ழொன்று வெடித்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

மின்சூளை ஒளிரச் செய்ய முற்பட்டபோது இந்த விபத்து  இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

வீட்டு முற்றத்தில்  காணப்பட்ட மின்குமிழொன்றை அவதானித்த 14 வயது  பிள்ளையொன்று அதனை கையிலெடுத்து தனது தந்தையிடம் ஒப்படைத்துள்ளது.

இதனையடுத்து தந்தை மின்சூளை ஒளிரச் செய்ய முற்பட்டபோது அது வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

இதன்போது தந்தை, 24 வயதான மகள் மற்றும் மகன் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த மின்சூள் வெடிக்கும் விதத்தில் எவரேனும் ஒருவரால் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்