மூன்று மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

மூன்று மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

மூன்று மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

02 May, 2014 | 7:37 pm

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக மழை பெய்யுமாயின், பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு, கற்பாறை சரிந்துவிழுதல் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடுமென இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

இந்த அனர்த்த நிலைமை தொடர்பில் குறித்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மலையக ரயில் மார்க்கத்தின் சில பகுதிகளில் மண்மேடு சரிந்து வீழ்ந்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கொழும்பிலிருந்து, பதுளை நோக்கிப் பயணித்த இரண்டு ரயில்களின் போக்குவரத்து இருவேறு பகுதிகளில் தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.

மண்சரிவினால் பொடி மெனிக்கே மற்றும் உடரட்ட மெனிக்கே ரயில்களின் போக்குவரத்தே தடைப்பட்டுள்ளது.

ஹப்புத்தளை – தியத்தலாவவுக்கு இடையிலும், ஒஹிய – இதெல்கஸ்ஹின்ன பகுதியிலும் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்ததால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரையில், எல்ல – வெல்லவாய வீதியை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால், கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல் உதயகுமார குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை சில தினங்களுக்கு நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்