கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு நிர்மாணம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு நிர்மாணம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு நிர்மாணம்

எழுத்தாளர் Staff Writer

02 May, 2014 | 2:37 pm

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கான பத்து மாடிகளைக் கொண்ட புதிய கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பொருட்டு சீன அரசாங்கம், 13,400 மில்லியன் ரூபாவை நிதியுதவியாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தேசிய வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு தற்போது சிறிய கட்டடமொன்றிலேயே இயங்கி வருவதால், அந்தப் பிரிவை நாடுகின்ற நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர், மக்களுக்கு செயற்திறனுடன் கூடிய தரமான வைத்திய சேவைகளை வழங்க முடியும் என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாகன தரிப்பிடம் மற்றும் பல்வேறு நவீன வைத்திய பரிசோதனை உபகரணங்களைக் கொண்டதாக இந்த புதிய கட்டடத் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்