வந்தாறுமூலை வளாகத்தில் மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் அமைதியின்மை

வந்தாறுமூலை வளாகத்தில் மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் அமைதியின்மை

வந்தாறுமூலை வளாகத்தில் மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் அமைதியின்மை

எழுத்தாளர் Staff Writer

02 May, 2014 | 7:10 pm

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்தில் மாணவர்கள் இன்று மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையினால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழக கதவுகள் மற்றும் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியமையே இந்த அமைதியின்மைக்கு காரணம் என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி கடந்த புதன்கிழமை மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்

இதனையடுத்து நான்கு மாணவர்களுக்கு ஒழுக்காற்று விசாரணையின் நிமிர்த்தம் வகுப்புத் தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையை நீக்குமாறு கோரியே மாணவர்கள் இன்று மாலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் அமைதியற்ற முறையில் செயற்பட்டதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸாரை  கடமையில் ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்