ஐ.எஸ்.ஐ. உளவாளி இந்தியாவில் கைது

ஐ.எஸ்.ஐ. உளவாளி இந்தியாவில் கைது

ஐ.எஸ்.ஐ. உளவாளி இந்தியாவில் கைது

எழுத்தாளர் Staff Writer

02 May, 2014 | 5:41 pm

இலங்கையிலிருந்து தமிழக கடற்கரையின் ஊடாக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறையினர் இந்தியாவுக்குள் ஊடுருவலாம் என இந்திய மத்திய புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மத்திய ரயில் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளை இலக்குவைத்து தமிழகத்தில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ. அமைப்பு திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக இந்திய புலனாய்வு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

டெல்லியில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் சிலருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் தொடர்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, சென்னையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளியான இலங்கையரிடம் இந்திய மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்திவருவதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையிலிருக்கும் பாகிஸ்தான் துணைத் தூதரக அதிகாரி ஒருவர் தன்னை உளவாளியாக மாற்றியதாக குறித்த  சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு ஆட்களை அனுப்பி அங்கிருந்து தமிழக கடற்கரையின் ஊடாக இந்தியாவிற்குள் ஊடுருவ ஐ.எஸ்.ஐ. அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்