எல்ல – வெல்லவாய வீதியூடான வாகனப் போக்குவரத்துக்கு தடை

எல்ல – வெல்லவாய வீதியூடான வாகனப் போக்குவரத்துக்கு தடை

எல்ல – வெல்லவாய வீதியூடான வாகனப் போக்குவரத்துக்கு தடை

எழுத்தாளர் Staff Writer

02 May, 2014 | 9:53 am

கற்பாறைகள் சரிந்து வீழ்ந்தமையால் எல்ல – வெல்லவாய வீதியூடான வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கரந்தகொல்ல 12 ஆம் மைல்கல் பகுதியில் நேற்றிரவு வீதியின் மீது கற்பாறைகள் மற்றும் மண் சரிந்து வீழ்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.எல்.எம். உதயகுமார குறிப்பிட்டார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் எல்ல பொலிஸாரின் உதவியுடன் வீதியை சீராக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வீதியூடான பயணங்களில் ஈடுபடுவோர், கொஸ்லாந்தை மற்றும் பசறை – படல்கும்புர வீதிகளை மாற்றுவழியாக பயன்படுத்துமாறும் பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்