பொத்துஹார ரயில் விபத்து; ரயில்வே ஊழியர்கள் ஐவர் பணியிலிருந்து இடைநிறுத்தம்

பொத்துஹார ரயில் விபத்து; ரயில்வே ஊழியர்கள் ஐவர் பணியிலிருந்து இடைநிறுத்தம்

பொத்துஹார ரயில் விபத்து; ரயில்வே ஊழியர்கள் ஐவர் பணியிலிருந்து இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

01 May, 2014 | 10:02 am

பொத்துஹார ரயில் விபத்து தொடர்பில் ரயில்வே ஊழியர்கள் ஐவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து பளை நோக்கிப் பயணித்த ரயிலின் சாரதி, உதவியாளர் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து பொதுமுகாமையாளர் பி.ஏ.பீ ஆரியரத்ன தெரிவித்தார்.

இவர்களைத்தவிர, பொத்துஹார ரயில் நிலையப் பொறுப்பதிகாரியும், ரயில் சமிஞ்சை உத்தியோகத்தரும் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ரயில்வே திணைக்களம் முன்னெடுத்த முதற்கட்ட விசாரணைகளின் பின்னர், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஜரட்ட ரெஜின ரயில், கடுகதி ரயிலுடன் பொத்துஹார ரயில் நிலையத்தில் நேற்று நேருக்குநேர் மோதியதில் காயமடைந்த 45 பேர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்