நான் எந்த குற்றமும் செய்யவில்லை – அமலா பால்

நான் எந்த குற்றமும் செய்யவில்லை – அமலா பால்

நான் எந்த குற்றமும் செய்யவில்லை – அமலா பால்

எழுத்தாளர் Staff Writer

01 May, 2014 | 11:15 am

தென்னிந்தியாவின் பிரபலமான நடிகை அமலா பால். அதிக நாட்களாக தன் காதலை பற்றி யாரிடமும் சொல்லாமல், திடீரென்று இயக்குனர் எ.எல்.விஜய்யை காதலிக்கிறேன், ஜுன் மாதம் திருமணம் என அறிவித்தார்.

இப்போது இதுவே அவருக்கு பிரச்சனையாக அமைந்தது. தெலுங்கில் ரமேஷ் வர்மா படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கினார். ஆனால் உடனே திருமணம் பற்றி அறிவிப்பு வந்ததால், இயக்குனர் அமலா பாலை குறை கூறியுள்ளார்.

அமலா பால் சும்மா இருப்பாரா அவரும் இதற்கு பதில் அடி கொடுத்துள்ளார். ”நான் இந்த படத்திற்கு கால்ஷிட் கொடுத்தது மார்ச் முதல் மே வரை குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் 45 நாட்கள் மட்டுமே. இதில் ஜூன் மாதம் நடைபெற வேண்டிய திருமணத்தை பற்றி அவர்களுக்கு கூற வேண்டிய அவசியம் என்ன ?

கூறப்பட்ட காலத்துக்குள் படப்பிடிப்பு நடத்த முடியாமல் இருப்பதற்கு பல்வேறு உண்மையான காரணங்கள் இருக்க என் திருமணத்தை சுட்டி காட்டி அவர்கள் புழுதி இறைப்பது அநாகரீகமானது.” என்று தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்