English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
01 May, 2014 | 6:47 pm
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இன்று ஊர்வலங்களும், பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பிரதான தொழிற்சங்கங்களின் மே தின ஊர்வலமும் பொதுக் கூட்டங்களும் பல இடங்களிலும் இடம்பெற்றன.
கட்சிகளின் தலைவர்கள் முக்கியஸ்தர்களின் தலைமையில் இந்தக் கூட்டங்கள் நடைபெற்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு நகரிலுள்ள மகாத்மா காந்தி சதுக்கத்திலிருந்து ஆரம்பமான மேதின ஊர்வலம் சாள்ஸ் மண்டபம் வரை சென்று அங்கு மேதினக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் பகாராளுமன்ற, மாகாண மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு மே தினக் கூட்டம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி தென்மராட்சி கலை மன்ற கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
சாவகச்சேரி நகரிலிருந்து தென்மராட்சி கலை மன்ற கலாசார மண்டபம் வரை ஊர்வலமாக சென்று அங்கு மே தினக் கூட்டம் நடைபெற்றது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ சுமந்திரன், ஸ்ரீதரன், ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, கிளிநொச்சியிலும் மேதின நிகழ்வுகள் நடைபெற்றன.
கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் மேதின நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஸ்கந்தபுரம் சந்தியில் ஆரம்பித்த மேதின பேரணி பொதுமண்டபத்தில் நிறைவடைந்ததுடன் அங்கு மேதினக் கூட்டம் நடைபெற்றது.
அத்துடன் சிறிலங்கா சுகந்திரக்கட்சியின் மேதினப் பேரணி கிளிநொச்சி கரப்போக்கிலிருந்து ஆரம்பித்து, டிப்போ சந்தியில் பேரணி நிறைவுபெற்றதுடன் அங்கு மேதினக் கூட்டமும் இடம்பெற்றது.
இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் பண்டாரவளை நகரில் நடைபெற்றது.
பண்டாரவளை மாநகரசபை மைதானத்திலிருந்து பண்டாரவளை நகர் வரை ஊர்வலமாக சென்று நகர மத்தியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தொழிலாளர் காங்கிரஸ்ஸின் மேதினக் கூட்டம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஸ, கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மலைய மக்கள் முன்னணியின் மே தினக் கூட்டம் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் நடைபெற்றது.
தலாவக்கலை நகரிலிருந்து ஆரம்பமான பேரணி நகர சபை மைதானம் வரை சென்று அங்கு கூட்டம் நடைபெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினி சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டம் ஹட்டன் நகரில் நடைபெற்றது.
மல்லியப் பூ சந்தியிலிருந்து ஆரம்பமான பேரணி ஹட்டன் பஸ் நிலையம் வரை சென்று அங்கு கூட்டம் நடைபெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் இராஜதுறை உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தினக் கூட்டம் மகிழடித் தீவு மைதானத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு லேக் வீதியில் உள்ள கட்சித் தலைமையத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு கல்லடிப் பாலம் ஊடாக கொக்கட்டிச் சோலை மகிழடி தீவு மதைனத்தை வந்தடைந்தது.
கட்சித் தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான் சிவநேசதுறை சந்திரகாந்தனின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கொழும்பு நகரிலும் மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் என்பன இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
கொழும்பில் மாத்திரம் 17 மே தின ஊர்வலங்களும் 15 பேரணிகளும் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தின ஊர்வலம், கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கிற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது கெம்பல் மைதானத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
தொழிலாளர்களின் உருமைகளுக்காக மாத்திரம் இன்றி இலங்கைகு விடுக்கப்படும் வெளிநாட்டு அச்சுருத்தல்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இம்முறை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்விகள் இடம்பெறுகின்றன.
ஐக்கிய மக்கள் முன்னனியின் மே தின ஊர்வலம் ராஜகிரிய ஆயுர்வேத சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு பொரலையை வந்தடைந்து தேசிய சுதந்திர முன்னனியின் மே தின ஊர்வலத்துடன் ஒன்றிணைந்துள்ளனர்.
தேசிய சுதந்திர முன்னனியின் மே தின ஊர்வலம் தெமட்டகொட புனித ஜோனஸ் கல்லூரிக்கு அருகில் ஆரம்பிக்கபட்டு தெமட்டகொட பீ.டீ. சிறிசேன விளையாட்டரங்கில் பொதுக் கூட்டம் இடம்பெற்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் மே தின பேரணி தெஹிவளை எஸ்.டீ.எஸ் ஜயசிங்க மைதானத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது ஹெவலோக் நகர் பீ. ஆர். சீ. விளையாட்டரங்கில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இலங்கை வங்கி சேவையாளர்களின் மே தின ஊர்வலம் கொழும்பு ஹைட் பாரக் மைதானத்தில் இடம்பெற்றது.
ஜனநாயக கட்சியின் மே தின ஊர்வலம் கொழும்பு கோட்டை சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பெலவத்தை புத்ததாச மைதானத்தில் கூட்டம் இடம்பெறுகின்றது.
இதேவேளை, கொழும்பு நகரில் முன்னெடுக்கப்படும் மே தின ஊர்வலங்கள் காரணமாக போக்குவரத்தில் ஏற்பட கூடிய சிக்கல் நிலைமைகளை தவிர்க்கும் பொருட்டு விசேட போக்குவரத்து திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
08 Jan, 2020 | 07:00 PM
02 May, 2017 | 06:48 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS