English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
01 May, 2014 | 3:25 pm
தமிழகத்தின் மத்திய ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் 22 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ரயில்வே பொலிஸார் மற்றும் மாநில பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை இந்தச் வெடிப்புச் சம்பவத்தினால் யாரும் அச்சமடையத் தேவையில்லை எனவும், தமிழகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் மாநில முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டுள்ள தமிழக முதல்வர், சதிச் செயலில் ஈடுபட்டவர்களை விரைவாக கைதுசெய்வதற்கு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 1 இலட்சம் ரூபாவும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவும் இழப்பீடாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் உளவாளி ஒருவர் நேற்றைய தினம் சென்னையில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
26 Feb, 2021 | 10:23 PM
24 Jan, 2021 | 02:35 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS