சென்னை மத்திய ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு; ஒருவர் பலி

சென்னை மத்திய ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு; ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

01 May, 2014 | 10:40 am

சென்னை மத்திய ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை குண்டு வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பெங்களூரில் இருந்து புறப்பட்ட கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 7.30 மணியளவில் சென்னை மத்திய  ரயில் நிலையத்திற்கு வந்தது.

9ஆவது நடைமேடைக்கு ரயில் வந்து சேர்ந்த சில நிமிடங்களில் ரயிலில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் எஸ்-4, எஸ்-5 பெட்டிகள் சேதமடைந்தன.

குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இளம் பெண் பலியானார். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் அனைவரும் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்