சிரியாவில் பாடசாலையொன்றின் மீது குண்டு தாக்குதல்

சிரியாவில் பாடசாலையொன்றின் மீது குண்டு தாக்குதல்

சிரியாவில் பாடசாலையொன்றின் மீது குண்டு தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

01 May, 2014 | 5:28 pm

சிரியாவின் அலேப்போ நகரிலுள்ள பாடசாலையொன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.

சிரிய அரச படையினர் குறித்த பாடசாலை மீது நடத்திய விமானத் தாக்குதலில் 10 சிறுவர்கள் உட்பட
19 பேர் கொல்லப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை சட்டத்தை கொடூரமாக மீறும் செயல் என ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி வலரியா அமோஸ் கூறியுள்ளார்.

சிறுவர்கள்  பெண்கள் ஆண்கள் என அனைவரும் நாளாந்தம் இலக்கு வைக்கப்படுவதாக  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சிரியாவிலுள்ளவர்களுக்கு மனிதாபிமான  உதவிகளை வழங்குவது தொடர்பில் ஐ.நா பாதுகாப்பு பேரவையில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானம் செயலுரு பெறவில்லை என ஐ.நா குற்றஞ்சாட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்