சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டில் ஊர்வலங்களும், பேரணிகளும் ஏற்பாடு

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டில் ஊர்வலங்களும், பேரணிகளும் ஏற்பாடு

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டில் ஊர்வலங்களும், பேரணிகளும் ஏற்பாடு

எழுத்தாளர் Staff Writer

01 May, 2014 | 10:18 am

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இன்று ஊர்வலங்களும், பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு மாநகரை மையப்படுத்தி, பிரதான அரசியற்கட்சிகள் தமது தொழிலாளர் தின கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்பன இணைந்து முன்னெடுக்கும் ஊர்வலம், கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கிற்கு அருகில் ஆரம்பமாகவுள்ளது.

கட்சியின் பிரதான மே தின பேரணி பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின ஊர்வலம் இம்முறை அம்பாறை நகரில் நடைபெறவுள்ளது.

திகாமடுல்ல நகரில் ஆரம்பமாகும் ஊர்வலம், பிரதான வீதிகளின் ஊடாக அம்பாறை நகரை சென்றடையவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் மே தின பேரணி கொழும்பு பி.ஆர்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தெகிவளை ஜயசிங்க மைதானத்தில் ஆரம்பமாகும் ஊர்வலம், பி.ஆர்.சி மைதானத்தை சென்றடையவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.

அரசியற் கட்சிகள் தவிர, தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகளும் கொழும்பு நகரில் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்