இலங்கை மீனவர்கள் ஐவர் கைது

இலங்கை மீனவர்கள் ஐவர் கைது

இலங்கை மீனவர்கள் ஐவர் கைது

எழுத்தாளர் Staff Writer

01 May, 2014 | 7:15 pm

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த ஐந்து இலங்கை மீனவர்கள், இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹிக்கடுவையிலிருந்து கடந்த மார்ச் மாதம்  மீன்பிடிக்க சென்றவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் லால் டீ. சில்வா தெரிவித்தார்.

ஒடிசா மாநிலத்தின் பரடிப் கடற்கரையிலிருந்து 139 கடல் மைல் தொலைவில் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மீனவர்களின் படகு மற்றும் அவர்களால் பிடிக்கப்பட்ட ஒரு தொகை மீன்களும் கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்