இலங்கை அகதிகள் மூவருக்கு இந்தியாவில் ஆயுள் தண்டனை

இலங்கை அகதிகள் மூவருக்கு இந்தியாவில் ஆயுள் தண்டனை

இலங்கை அகதிகள் மூவருக்கு இந்தியாவில் ஆயுள் தண்டனை

எழுத்தாளர் Staff Writer

01 May, 2014 | 6:39 pm

இலங்கை அகதிகள் மூவருக்கு இந்தியாவில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சக அகதி ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக இவர்களுக்கு இன்று  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாழவந்தான் கோட்டை அகதி முகாமில் 38 வயதான ஒருவர் கடந்த ஒக்டோம்பர் மாதம் 5 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் மூன்று அகதிகள் அதே தினத்தில் கைது செய்யப்பட்டனர்.

கொலை குற்றத்திற்கான ஆதாரங்கள் நீரூபிக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளிகளிகளுக்கு இன்று ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்